தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீடிக்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். பட்ஜெட் தாக்கல் மற்றும் பொது விவாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இதுவரை வருவாய், மருத்துவம், நெடுஞ்சாலைகள், நீர்வளம், ஊரக வளர்ச்சி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு, உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளன.இந்தச் சூழலில் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு வருகின்றன.

தமிழக அரசின் கொள்கைகளில் சமூக நீதி முக்கிய இடம் வகிப்பதால் இந்தத் துறைகள் மீதான விவாதம் அதிக கவனத்தை ஈர்க்கிறது. தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தபின் மாநில அளவிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாப்பது, சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவது ஆகியவை அரசின் முன்னுரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பேரவையில் இன்று ஹாட் டாபிக்..! சுற்றுலா, நீர்வளத் துறை குறித்து கடும் விவாதம். ! அடுக்கடுக்கான கேள்விகள்..!!
மானியக் கோரிக்கை விவாதங்களில் உறுப்பினர்கள் துறைகளின் நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் செயல்பாடு, பயனாளிகளுக்கு உதவிகள் சரியாக சென்று சேருகிறதா என்பன போன்ற அம்சங்களை எழுப்புவது வழக்கம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பான உதவித்தொகைகள், மாணவர்களுக்கான உதவித்தொகைகள், விடுதி வசதிகள், தொழில் முனைவோர் உதவிகள், சிறுபான்மையினருக்கான திட்டங்கள் ஆகியவை விவாதப் பொருளாக அமைய வாய்ப்புள்ளது. அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடும் வாய்ப்பும் உள்ளது.
இதையும் படிங்க: விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!