ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் என் அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தேசிய உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்றார். மோட்டார் பந்தய நகரம் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மோட்டார் பந்தயத்தடம் மற்றும் அதற்கான நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் நகரத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொகுதி சார்ந்த தேவைகள்.. வினாக்கள் - விடைகள்..!! சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்..!!
இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்த அதிநவீன உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய மோட்டார் ஸ்போர்ட் சிட்டி அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். புதிய சட்டப்பேரவை கட்டிடம் அமைப்பது இன்றியமையாதது. 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அதிநவீன ஆவின் பாலகங்கள்... அதிரடி நடவடிக்கையில் விஜய் அரசு..! அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு..!