ஈரோடு கருங்கல்பாளையம் லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்த ஆடிட்டர் ராஜன் என்பவரது வீட்டில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் வீட்டின் பூட்டை சாவியால் திறந்து நகைகளை திருடி சென்றார். 100 சவரன் நகைகள் திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்த போலீசார் 30 சவரன் நகை திருடப்பட்டதாக விசாரணைக்கு பின் தெரிவித்தனர்.
ஆடிட்டர் ராஜன் மற்றும் அவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை நிர்மலா ஆகியோர் பணிக்கு சென்றிருந்த நிலையில், அவர்களது இரண்டாவது மகன் ஜெயகிருஷ்ணா வீட்டை பூட்டிவிட்டு மாடி படி அருகே மறைவான இடத்தில் சாவியை வைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த ஜெயகிருஷ்ணாவின் நண்பர் மயில்சாமி சாவி மூலம் வீட்டைத் திறந்து வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளார் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிர்மலா வீட்டில் நகைகள் திருடு போனது குறித்து புகார் அளித்தார்.
இதையும் படிங்க: “முடிஞ்சா வேங்கைவயலுக்கு போய் பாருங்க”... திருமாவுக்கு தில்லா சவால்விட்ட தமிழிசை சவுந்தரராஜன்...!
இதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகளின் அளவு குறித்து பெரும் குழப்பம் நிலவியது. விசாரணைக்குப் பிறகு 30 சவரன் நகை திருடப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது ஜெய கிருஷ்ணாவின் நண்பர் மயில்சாமி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் இருந்து 63 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்... திமுக விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 20 முதல் தொடக்கம்!