தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அவனியாபுரம் என்ற சிறிய ஊரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, தமிழ் மக்களின் பாரம்பரியம், வீரம் மற்றும் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு மாபெரும் விழாவாகும். இது பொங்கல் பண்டிகையின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. பொங்கல் எனும் அறுவடைத் திருவிழா, இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவது. அதில் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவல் விளையாட்டு, தமிழரின் துணிச்சலை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க நிகழ்வு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பிரபல ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலாவதாகும். பொதுவாக தைப் பொங்கல் அன்று அல்லது அதைச் சுற்றிய தேதிகளில் இது நடைபெறும். போட்டிக்கு முன்னர் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். ஆன்லைன் பதிவு மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். இரட்டை அரண்கள், மருத்துவ வசதிகள், போலீஸ் பாதுகாப்பு போன்றவை கட்டாயம் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி, காளைகளுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் எந்த செயலும் அனுமதிக்கப்படாது.போட்டியின் உச்சம் பரிசுகள் வழங்கும் நிகழ்வு. சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், சிறந்த காளை உரிமையாளருக்கு டிராக்டர் அல்லது கார் போன்ற பெரிய பரிசுகள் வழங்கப்படும்.
அதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு பைக்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நாணயங்கள் போன்றவை வழங்கப்படும். இவை அனைத்தும் போட்டியின் உற்சாகத்தை அதிகரிக்கும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்க முகூர்த்த கால் நடும் விழா என்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு முகூர்த்தகால் நட்டனர். அப்போது அமைச்சர் மூர்த்தியிடம் வாக்குவாதம் செய்தனர். அனைத்து தரப்பு மக்களையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!
தங்களை அழைக்கவில்லை என்று ஒரு தரப்பினர் அமைச்சர் மூர்த்தியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி ஆண்டுதோறும் அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து தான் விழா நடத்தப்படுவதாகவும், எந்தவிதமான பாரபட்சமும் கிடையாது என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். ஒரு தரப்பு மக்களை மட்டும் அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சர மூர்த்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!