நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்திருக்கும் பாபநாசம், கடையம் சுற்று வட்டார பகுதியிலுள்ள மலையடிவார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. அதன்படி பாபநாசம் அடுத்த வடமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் காலையில் இருந்தே தோட்டத்தில் இருந்த காவலாளிகள் விரட்டியும் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது.
இந்த நிலையில் மாலையில் தோட்டத்தின் தொட்டி அருகே பதுங்கி இருந்த கரடி திடீரென காவலாளி முருகன் என்பவரை தாக்கியுள்ளது. தொடர்ந்து விரட்டிய நிலையில் சிறிது தூரத்தில் மீண்டும் ஆக்ரோஷமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்த நிலையில், தலை ஒருபுறமும் உடல் ஒரு புறமும் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றும், கரடி ஆக்ரோஷமாக இருந்ததால் விரட்டுவதில் சிக்கல் நீடித்தது. வனத்துறையினர் கையில் தற்காப்பிற்காக துப்பாக்கி மற்றும் வனவிலங்குகளை விரட்ட வெடிகள் உள்ளிட்டவை வைத்து இருந்தும் கரடியிடம் இருந்து இறந்த முருகனை மீட்க வனத்துறையினர் அலட்சியம் கட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: "என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!
மேலும் கடந்த சில மாதங்களாகவே கரடிகள் நடமாட்டம் அதிகமாக நிலவி வரும் நிலையில் வனத்துறையினர் பகல் நேரங்களில் தொடர்ந்து பணி மேற்கொண்டு விட்டு கரடி வரும் வேலைகளில் வருவதில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மயக்க ஊசியுடன் கூடிய துப்பாக்கி மற்றும் கூண்டு வைத்து கரடியை பிடிக்கும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்..
இதையும் படிங்க: ஆவின் பால்களில் ரசாயன நெடி..! பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை மண்டலம்..!