வாக்குத் திருட்டு விவகாரம் வீரியம் எடுத்தது. பல்வேறு மாநிலங்களில் வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.
மற்றொரு பக்கம் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஏனெனில் ஏராளமான மக்களின் வாக்குரிமையை இது பறிப்பதாக அமையும் என்று கூறி இருக்கின்றனர். இருப்பினும் முதலில் பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

அதன்படி பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. 65 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பரபரக்கும் பீகார்... நாளை தேர்தல் முடிவுகள் வெளியீடு... வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை...!
அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் பாஜக கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடந்தால் தாங்கள் வெற்றி பெறுவோம் இன்றும் உறுதிப்பட கூறினார். நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் மகாத் பந்தன் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!