சென்னை அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தம்பி கௌரவ் குமார், அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது என கூறினார்.
மது போதையில் வடமாநில இளைஞர்கள் கௌரவ் குமாரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதோடு, தடுக்க முயன்ற கௌரவ் குமாரையும், ஏதுமறியாத அவர்களது 2 வயது குழந்தையையும் கொன்றுள்ள கொடூர நிகழ்வு நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது என்றும் தலைநகரிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வு காவல்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா., இயங்குகிறதா என்ற ஐயத்தை எழுப்புகிறது எனவும் தெரிவித்தார்.

நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா என்ற கேள்வியையும் எழுப்புகிறது என்று கூறிய சீமான், 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் கூட மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுமையான சூழல் நிலவுவது, திமுக ஆட்சியில் எந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுவதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: பத்து வருஷ போராட்டம்... செவிசாய்க்காத திமுக அரசு.. மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க சீமான் வலியுறுத்தல்..!
இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத, உலகமே வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா என்றும் இதுதான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மிகச்சிறப்பான ஆட்சியா., வெட்கக்கேடு என சாடினார். திமுக அரசை அகற்றி நல்லதொரு அரசை நிறுவுவது ஒன்றே தமிழ்நாட்டு மக்கள், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான ஒற்றை வழி என்றும் பீகார் இளைஞர் கௌரவ் குமார் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட கொடூர குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வாரிசுகளுக்கே முதல்வர் பதவி? இதுவா குடியரசு? பணநாயகம் மறைந்து ஜனநாயகம் வெல்ல சீமான் வாழ்த்து..!