கோவை கொடிசியா வளாகத்தில் இன்று ஒரே நேரத்தில் பல துறைகளைச் சார்ந்த முன்னணி தொழில் கண்காட்சி (டிசம்பர் 11 முதல் 13 வரை) துவங்கியது. இதில் உணவு, பானம், பால், பிளாஸ்டிக் மற்றும் கழிவுத் தொழில்நுட்பத் துறைகள் சம்பந்தமான இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்தத் தொழில்முனைவோர் கண்காட்சியைத் துவக்கி வைத்த பின், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பா.ஜ.க.வின் அரசியல் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.
மகாகவி பாரதியார் குறித்த சர்ச்சை விவகாரம் பற்றிப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "பாரதி பாடியவற்றை முதலில் பார்க்க வேண்டும். சாதிகள் கூடாது எனப் பாடியவர் பாரதி. இவற்றை எல்லாம் முதலில் தமிழிசை சௌந்தரராஜன் பார்க்க வேண்டும்," என்று பா.ஜ.க. தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பா.ஜ.க.வின் அரசியல் குறித்து அவர் ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்தார். "பொய் என்றால் பிஜேபி, பிஜேபி என்றால் பொய் என்ற நிலைதான் உள்ளது," என்று பாரதிய ஜனதா கட்சி மீது அவர் கடும் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!
சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டபோது, "திருப்பரங்குன்றம் நிகழ்வு முறைப்படி நடக்கிறது. இதில் மக்கள் திருப்தியாக உள்ளனர்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: "மடியில் கனமில்லை, பயமுமில்லை!" பாஜக-வின் சதிகளை துணிச்சலுடன் எதிர்கொள்வோம் - ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!