சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருப்புவனத்தில் அஜித்குமார் குறித்து புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011ஆம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து விருதுநகர், ராமநாதபுரம், கரூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாவை மோசடி செய்ததாக இதுவரை 8 புகார்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதெல்லாம் போதாது என்று நிகிதா கல்யாண சீட்டிங்கிலும் கைதேர்ந்தவராக வலம் வந்தார் என்ற பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார், அவரது 4வது கணவரும் பாரதிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவருமான திருமாறன் ஜி. நிகிதாவிற்கும் தனக்கும் திருமணம் நடந்ததாகவும், முதலிரவில் பாலும், பழமும் சாப்பிட்டு முடித்த கையோடு தன்னை அம்போவென விட்டுவிட்டு, நிகிதா இரவோடு, இரவாக எஸ்கேப் ஆனதாக கதறி இருக்கிறார் திருமாறன் ஜி.
இதையும் படிங்க: கஸ்டடி மரணம்.. கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்..!

நிகிதாவின் அப்பா ஒரு சப் கலெக்டர், அம்மா ஒரு டீச்சர். அப்போது கோவையில் இருந்த எஸ்.பி. ஒருவருக்கு இவர்கள் குடும்பத்திற்கு தீவிர நெருக்கம் இருந்துள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல சீட்டிங் வேலைகளை குடும்பமாக சேர்ந்து செய்திருக்கிறார்கள் எனக்கூறியுள்ளார். மேலும் கண்டிப்பா இவங்க நகைய தொலைச்சுருக்கவே மாட்டாங்க அவங்களுக்குள்ள ஏற்பட்ட யூகோ பிரச்சன காரணமா இந்த பொய்யான கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்க கிட்ட இருக்கிற பவரை வச்சு இந்த சம்பவத்தை நடத்தி இருக்காங்க என ஏற்கனவே நிகிதா மீது கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதை எல்லாம் விட கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக நிகிதா என்னை மட்டுமல்ல, மொத்த 4 கல்யாணம் செய்து அதிலும் மோசடி செய்திருக்கிறார். அந்த சீட்டிங் வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளது எனக்கூறிய திருமாறன், என்னை திருமணம் செய்ததோடு சரி, ஒருநாள் கூட என்னோட அந்த நிகிதா வாழவில்லை எனக்கூறியுள்ளார்.
பணமோடி வழக்கில் மட்டுமே குற்றவாளி என கருதப்பட்ட நிகிதா, தற்போது கல்யாண மோசடியிலும் கைதேர்ந்தவராக வலம் வந்திருப்பது தமிழக மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அப்படி என்ன அவசரம்? மாத்தி வெய்ங்க..! நீதிபதி கொடுத்த ஷாக்... தவெக அப்செட்!