தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் பிரேம்குமார் நடத்திவரும் நிறுவனங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.