சென்னை கிண்டியில் உள்ள லேபர் காலணி அருளாயம்பேட்டை பிரதான சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் காப்பீடு திட்டம், சொத்துவரி, குடும்ப அட்டை மற்றும் குழந்தை பெயர் பதிவுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இதுவரை தமிழ்நாட்டில் தென்படவில்லை; இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார். பருவமழை காலங்களில் வரக்கூடிய நோய் தொற்று தான் தற்போது உள்ளது. தமிழ்நாட்டில் புதிய நோய் தொற்று எதுவும் இல்லை. முகக் கவசம் அணிய வேண்டும் போன்ற பதட்டங்கள் எதுவுமில்லை.
இதையும் படிங்க: நல்லக்கண்ணுவுக்கு செயற்கை சுவாசம்!! யாரும் பாக்க வராதீங்க!! மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்!
மூளை தின்னும் அமீபா தொற்று கேரளாவில் அதிகமாக உள்ளது. சேற்றில் உருவாகும் வைரஸ். குளிக்கும்போது மூக்கு வழியாக வைரஸ் பரவும், இது தொற்று நோய் அல்ல என்றாலும் தமிழ்நாட்டிலும் தூர்வாரப்படாத குளம், குட்டைகள், நீச்சல் குளங்களில் குளோரின் போடாமல் மாசு பணிந்து இருக்கக் கூடிய நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு உடன் சேர்ந்து மாநகராட்சி இடங்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆய்வு செய்கிறார்கள், குளோரின் போடுகிறார்களா உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த மாதம் 2ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற முகாம்களில் ஒவ்வொரு முகாம்களிலும் 57 ஆயிரத்துக்கு மேற்பட்டடோர்கள் பயன்பெற்று உள்ளனர். வரும் சனிக்கிழமை தமிழத்தில் 37 இடங்களிலும் சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்த திட்ட முகாம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிக்குள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 1256 முகாம்கள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும், சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இதில் சென்னையில் 200 முகாம்களும், மற்ற ஆறு மாவட்டங்களில் தலா 50 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதாகவும், மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் உள்ளதாகவும் உறுதியளித்தார்.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ததாகவும், 63 நாடுகளில் இந்நோய் பரவல் இருப்பதால், வெளிநாட்டு பயணிகளுக்கு கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு சுகாதாரத்துறையில் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மதுரை மேயர், கவுன்சிலர்களை தவிர்த்த பிடிஆர்.. மக்களை சந்திக்க இவர்களுடன் தான் சென்றாராம்.. பின்னணி என்ன..??