இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அட்டவணையை அறிவித்தது. ஜூலை 30 அன்று வாக்குப்பதிவும், ஆகஸ்ட் 3 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல இடைத்தேர்தல் தேவைகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பீகாரின் பாங்கிபூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நிதின் நபின் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் காலியானது. மத்தியப் பிரதேசத்தின் டாடியா தொகுதி ராஜேந்திர பார்த்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெற்றிடமானது. குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதி யோகேஷ் படேல் மரணமடைந்ததால் காலியானது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 6 அன்று அரசிதழ் அறிவிப்பு, ஜூலை 13 வரை வேட்புமனு தாக்கல், ஜூலை 14 ஸ்க்ரூட்டினி, ஜூலை 16 வரை வேட்புமனு திரும்பப் பெறல் ஆகிய கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வாக்காளர் பட்டியல்களை புதுப்பித்துள்ளதாகவும், மாடல் கோட் ஆஃப் கண்டக்ட் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்று, மே 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் பெரும்பான்மைக்கு அருகில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், தேர்தலுக்குப் பின் பல வெற்றிடங்கள் உருவாகியுள்ளன.
இதையும் படிங்க: Whatsapp- ல் அப்டேட்...! இனி NUMBER தேவையில்லை... மெட்டாவின் புது ஐடியா..!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வென்று ஒன்றிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும், ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் TVK-வில் இணைந்து ராஜினாமா செய்ததால் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாகியுள்ளன. இந்த வெற்றிடங்கள் குறித்து சட்டப்பேரவை செயலகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் தயாரிப்புகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வந்தாலும், தேர்தல் ஆணையம் இதுவரை முழு அட்டவணையை அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: விவசாயிகளிடம் வசூல் சர்ச்சை... தவெக ஒழுங்கு நடவடிக்கை..! கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலர் அதிரடி நீக்கம்..!!