தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனக் கூறி ஆளுநர் அவருக்கு முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்காமல் இருந்து வருகிறார். ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பலரும் கூறி வருகின்றனர். ஆளுநரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காததைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை நேற்று நடத்தியது.

சென்னை அண்ணா சாலையில் தாராபூர் டவர்ஸ் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னின்று நடத்தினர். காங்கிரஸ் கட்சி சமீபத்தில் திமுகவுடனான நீண்டகால கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
இதையும் படிங்க: ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க விஜய்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த அர்ஜுன் சம்பத்... அடுத்து நடக்கப்போவது இதுவா?
தவெகவுக்கு காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தபோதும், பெரும்பான்மைக்கு (118) இன்னும் சில உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநர் தரப்பில் தாமதம் மற்றும் “பின்கதவு அரசியல்” நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தின்போது போக்குவரத்து நெரிசல், சாலை மறியல் உள்ளிட்ட காரணங்களால் சிந்தாதிரிப்பேட்டை (போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா? - விஜயால் வெளிச்சத்திற்கு வந்த கதர்சட்டைகளின் கலகம்...!