சென்னை நகரத்தின் வாழ்வாதாரமாகத் திகழும் செம்பரம்பாக்கம் ஏரி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கட்டமைப்பு. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது.
கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 24 அடி ஆழம் கொண்டது. மொத்த நீர் சேமிப்பு திறன் சுமார் 103 TMC. ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று.

அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களுக்கு அதிக அளவில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதையும் படிங்க: "HIGH ALERT"... ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க... நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!
அருவிகள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 20 அடியை எட்டியதால் விரைவில் நீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொட்டி தீர்க்கும் கனமழை... அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... சுற்றுலா பயணிகளுக்கு தடை...!