சென்னை மாநகராட்சியில 200 வார்டுகள் இருக்கிறது இந்த 200 வார்டுலுமே சமீப காலமாகவே பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அதேபோல் சென்னை மாநகராட்சி பயன்படுத்துவது பிளீச்சிங் பவுடரா அல்லது கோலமாவா என்ற கேள்வி வெகு நாட்களாகவே எழுகிறது.பொதுவாக சென்னை மாநகராட்சியில சாக்கடைகள் அருகிலேயோ, குப்பைத்தொட்டிகள் அருகிலே பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துவது வழக்கம். அதுவும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் அரசு நிகழ்ச்சிகளின் போது கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதேபோல இன்று சென்னை பகுதியில் அன்னம் தரும் அமுத கரங்கள் என்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மேயர் பிரியாராஜன் தலைமை தாங்கி இருந்தார். அப்பகுதியில் அதிகப்படியான குப்பை தொட்டிகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டதாக கூறப்படுகிறது. புளியந்தோப்பு பகுதியில் உள்ள மூன்று தெருக்களில் வெள்ளை நிறத்தில் பவுடர் தூவப்பட்ட நிலையில், அதில் இருந்து எந்த வாசனையும் வரவில்லை எனக்கூறப்படுகிறது. அப்போது குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர் ஒருவர், அதை கையில் எடுத்து பரிசோதித்து பார்க்கும்போது பிளீச்சிங் பவுடர் இல்லை என்று உறுதி செய்த பிறகு, அதனை கையில் எடுத்து கொண்டு மேயர் பிரியா ராஜனிடம் கொண்டு சென்று இது பிளீச்சிங் பவுடரா? அல்லது கோலமாவா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் மேயர் பிரியா; மேலிடம் வரை சென்ற விவகாரம்..!

அதற்கு பிரியா லேசாக அதிலிருந்து வாசனை வருகிறது . இது பிளீச்சிங் பவுடர் தான் என்று கூறினார். ஆனால் அதை கையில் கொடுத்த செய்தியாளர், இதை பரிசோதனை கூடத்திலே பரிசோதித்து இது பிளீச்சிங் பவுடர் தான் என்று உறுதியானால் எங்கள் மீது நடவடிக்கைகள் எடுங்கள் என்று கூறினார். அப்போதும் கூட சம்பவ இடத்திற்கு சென்று பார்க்காத மேயர் பிரியா, காரில் ஏறிக்கொண்டே “இது பிளீச்சிங் பவுடர் இல்லாமல், பான்ஸ் பவுடரா” என்று பதிலளித்துவிட்டு சென்றார்.

பிளீச்சிங் பவுடருக்குப் பதிலாக கோலமாவு தூவப்பட்டது குறித்து சிறிதும் கவலை இல்லாமல் சென்றதோடு, மக்களையும் ஊடகத்தையும் மதிக்காமல் மெத்தனமாக பதிலளித்த மேயர் பிரியாவுக்கு சோசியல் மீடியாக்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட மெத்தனமான திமிரான பதில்கள் திமுகவுக்கு அழிவு காலத்தைக் கொடுக்கும் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோளமாவு தூவுறாங்க மேடம்
மேயர் பிரியா : பிளீச்சிங் பவுடர் வாசனை தான் வருது கேமராவை ஆப் பண்ணுங்க...
~ இல்ல மேடம் இது கோலமாவு பாருங்க
மேயர் பிரியா : நீ யாரு ???
அழிவு காலம் நெருங்கிடிச்சி டா @arivalayam 😡
pic.twitter.com/3z0uyH2T1B
— Joaquin Phoenix (@PhoenixAdmk) May 2, 2025
இதையும் படிங்க: பல பேருக்கு இன்று தூக்கம் போயிருக்கும்! விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் பேச்சு...