தமிழகத்தில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு லட்சம் பேருக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.41.12 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 18.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு லட்சம் பேருக்கு குடும்ப அட்டையில் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உடைகிறதா பாமக? - நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அன்புமணி... பாமக முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு...!
தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இதையும் படிங்க: அமித் ஷா கையில் எடுத்து புது ஆயுதம்... அதிர்ச்சியில் உறைந்து போன எடப்பாடி பழனிசாமி...!