சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் பேரம் பேசி குழந்தை விற்பனை செய்து வந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் இரண்டு குழந்தைகளை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை விற்பனை தொடர்பாக சமீபத்தில் வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தன.இந்த நிலையில் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக காவல்துறையால் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வித்யா என்ற இளம்பெண்ணை புழல் போலீசார் கைது விசாரித்துள்ளனர். அப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளிடம் 10 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி குழந்தைகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பத்தூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளை மீட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் குழந்தைகளை திருடி விற்பனை செய்திருக்கலாம் என்றும் பல நாட்களாக இந்த தொழிலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் வித்யாவிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தி. மலை கிரிவலம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது..!
குழந்தை கடத்தல் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக உள்ளது. மேலும் இது குழந்தைகளை உழைப்பு, பிச்சை, பாலியல் சுரண்டல் அல்லது சட்டவிரோத தத்தெடுப்பு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரிதன்யா தற்கொலை வழக்கு..! காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!