தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று. இதையொட்டி, கட்சி தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டவுள்ளனர்.
இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். கலைஞர் கருணாநிதி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மேலும், அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெச்சகுறி தப்பாது..! ஆட்சியில் பங்கு.. அன்புமணி திட்டவட்டம்..!
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!