தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில், இளம் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்குவதற்காக தொழில் முனைவோர் கடன்களை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?
இதற்காக, இந்த ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக் குழு கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்' மூலம் ரூ.7,000 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் வாயிலாக, இந்தக் கடன்கள் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கனிம வளத்தடை..! அதிரடி காட்டிய தமிழக அரசு...! தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்..!!