சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்தார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது 2026 சட்டமன்றத் தேர்தல். நடிகர் சி. ஜோசப் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தல் அனுபவத்திலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்து, விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல; தமிழ்நாட்டு அரசியலில் இளம் தலைமைக்கும், மாற்றத்துக்கான மக்கள் ஆசைக்கும் கிடைத்த அங்கீகாரம். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விஜய் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுத்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்புக்கென தனி படை, போதைப்பொருள் ஒழிப்புக்கு சிறப்பு படை ஆகியவை உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

இந்த நடவடிக்கைகள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திசையில் முதல் அடியாக அமைந்தன. இந்த வெற்றி தமிழ்நாட்டு அரசியலை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. இரு திராவிடக் கட்சிகளின் இருமுனை ஆதிக்கம் உடைந்து, புதிய மாற்று சக்தி உருவாகியுள்ளது. விஜய்யின் தலைமை இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. புதிய திட்டங்கள் உள்ளிட்டவைகளை பாஜக அரசு முன்வைத்ததாக சொல்லப்பட்ட நிலையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!