கடந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு, முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்களை நேரில் அழைத்து நாளை (04.11.2026) பாராட்டு விழா நடைபெறவுள்ளது என்றும், இவ்விழாவில் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்றும் அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தொகுதி வாரியாக மாணவர் பாராட்டு விழாக்கள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்குப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் "10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தங்களது பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளைப் பாராட்டும் விழா நாளை புதன்கிழமை (04.11.2026) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!
முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரையில் நாளை மதியம் 2:00 மணியளவில் நடைபெறவுள்ள இந்தச் சிறப்புப் பாராட்டு விழாவில், முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள் நேரில் பங்கேற்று, சாதனை படைத்த மாணவ-மாணவியருக்குச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் உயர்கல்விக்கான ஊக்கத்தொகையினை வழங்கி வாழ்த்தி கௌரவிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களாக மற்ற அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கும் தொடர்ச்சியாகப் பாராட்டு விழாக்கள் நடைபெற உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: ஆளுங்கட்சிக்குள் வெடிக்கும் வசூல் புகார்கள்! முதல்வர் கையில் முக்கியப் பட்டியல்... களையெடுப்பு தொடங்குமா?