தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக மதுரை தேனி ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் இன்று அதிகமாக இருந்த நிலையில், மதுரை மாநகர் தல்லாகுளம், அண்ணாநிலையம், அண்ணாநகர், கே.கே.நகர், கரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.

திடீர் கனமழையால் மதுரை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மதுரைக்கு சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமடித்து கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கத்திமுனையில் விமானம் கடத்தல்.. 3 பேருக்கு கத்திக்குத்து.. நடுவானில் பயணிகள் திக்.. திக்..!

மதுரை விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்ததால் ஐதராபாத்தில் மாலை 4.20மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 5.20 மணி வரும் இண்டிகோ விமானம் . பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் 40 நிமிடங்களுக்கு மேல் சிவகங்கை திருப்புவனம், திருமங்களம் கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதியில் வட்டம் அடித்தது அதனை தொடர்ந்து மாலை 6.05. மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தென்மாவட்டங்களில் மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது.
திருபுவனம் திருமங்கலம் கள்ளிக்குடி போன்ற பகுதிகளில் விமானம் சுற்றியதால் பொதுமக்கள் ஆச்சரியமாகவும் விமானத்தை பார்த்தனர். இதனால் வேறு ஏதும் காரணமாக பீதியுடன் காணப்பட்டனர்.
இதையும் படிங்க: சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!