ரீல்ஸ் மோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எதையாவது வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் ரயில் தண்டவாளம் அருகில் விரைவு ரயில் வரும்போது வீடியோ எடுத்து அந்த ரயில் வரும் வேகத்தில் வீடியோ எடுக்கும் இளைஞரும் அடித்து செல்லக்கூடிய வீடியோவும் உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவமும் அரங்கேறி வருகிறது. அதேபோல் கடல் அலை, மலைப்பாங்கான பகுதிகளிலும் ரீல்ஸ் எடுக்கிறேன் என்ற பெயரில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும், ரயிலில், பேருந்துகளில் தொங்கிக்கொண்டு ரீல்ஸ் எடுத்து உயிரிழக்கும் சம்பவங்களும் நெஞ்சை உருக்குவதாக அமைகின்றது. இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை யாரும் கண்டு கொள்ளாததால் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும் ரீல்ஸ் மோகத்தில் எடுத்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது , திருத்தணியில் வசிக்கின்ற சில இளைஞர்கள் தங்கள் மனைவியுடன் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருத்தணி- அரக்கோணம் செல்லும் புறவழிச் சாலை பகுதியில் ரீல்ஸ் மோகத்தில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். இரு சக்கர வாகனத்தின் முன்பக்கம் பெட்ரோல் டேங்கில் மனைவியை அமர வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டும் கைகளை விரித்தும் ஆபத்தான முறையில் மாநில நெடுஞ்சாலையில் செல்கின்னர்.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. ரீல்ஸ் மோகத்தால் சட்டத்தை மீறி இது போன்ற காரியத்தை உடனடியாக திருத்தணி காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்பத்தை காப்பாத்த பிஜேபிக்கு அடிமை ஆயிட்டாரு! இபிஎஸ்ஐ வெளுத்து வாங்கிய டிகேஎஸ்
தற்பொழுது இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர்களை பார்த்து மற்றவர்கள் இது போல் காரியங்கள் செய்யாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஆபத்தான, அசம்பாவித விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேபொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ஆட்டையை போட காத்திருக்கும் AI.. இனி வங்கிகளுக்கு பாதுகாப்பு இல்லை..