மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுத்தது அதிமுக அரசு என்று தெரிவித்தார். விவசாயத்திற்கு முக்கியமான நீரை முழுமையாக கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து பல ஆண்டுகளாக ஏரி, குளங்கள், அணைகளை தூர்வாரியதாக தெரிவித்தார்.
ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டதாகவும், அதன் வண்டல் மண் விவசாய உரமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். விவசாய பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் புயல், வெள்ளம் என பேரிடர் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நிவாரணத்தொகை பெற்று தந்தது அதிமுக அரசு என்றார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு செங்கல் தொழில் சூளைகளுக்கு தேவையான வண்டல் மண் தடையில்லாமல் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார். நதிநீர், ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் மற்றும் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தி எரிகளை நிரப்பி பாசனத்திற்கு தேவையான நீரை கொடுத்தது அதிமுக என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீரணும்... சுதந்திர தினத்தில் இபிஎஸ் சூளுரை!
அதிமுக ஆட்சி அமைந்ததும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து ஏரியில் விட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்றார். மக்களின் கோரிக்கையை ஏற்று பெருமளவு மஞ்சள் உற்பத்தி செய்யப்படும் கணியம்பாடி பகுதிகளில் கிடங்கு அமைக்கப்படும் என உறுதி அளித்தார். ஏழை எளியோர் மற்றும் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: தலைமைப் பண்பு இல்லைன்னா தோல்வி நிச்சயம்... எடப்பாடியை வசைப்பாடிய ஓபிஎஸ்!