திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பூர் சென்ற கொரியர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வாகனத்தில் பெட்டிகளில் பார்சல் செய்த நிலையில் 2 கோடியே 75 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான 250 சவரன் தங்கம்,வெள்ளி மற்றும் வைர நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்த கொரியர் ஊழியர்களான இளவரசன்,விஷ்ணு ஆகியோரிடம் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளுக்கான ஆவணங்கள் கேட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வது தெரிய வந்தது. கொரியர் ஊழியர்கள் எங்களிடம் பார்சல் கொண்டு செல்வதற்கான பில் மட்டுமே உள்ளது. மேலும் கோவையிலிருந்து பல்லடம், திருப்பூர், உடுமலை பகுதியில் உள்ள சில நகைக்கடைகளில் இறக்குமதி செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லும் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த நகைகளை தேர்தல் நடத்தும் அலுவலர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். உரிய ஆவணங்கள் கொடுத்து நகைகளை பெற்று கொள்ளுமாறு கொரியர் ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2 கோடியே 75 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் கூடவே இருக்குற திருட்டு பையன் தான் அதை செஞ்சிருக்கான்: சரத்குமார் ஆவேசம்...!
இதையும் படிங்க: #BREAKING கோடி கோடியாய் பணம் பதுக்கல்?... மின்னல் வேகத்தில் களமிறங்கிய பறக்கும் படை... நெல்லையில் பரபரப்பு...!