திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று நெல் கொள்முதல் நிலையத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் நெல் மணிகள் முளைத்து வீணாகும் சூழல் நிலவுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக கூறியிருந்தார். திமுக அரசு நெல் கொள்முதல் செய்வதை தாமதப்படுத்துவதாகவும் குறைந்த அளவு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
நெல்மணிகள் முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியதற்கு, அதிமுக ஆட்சியில் நாற்று நாற்று நடும் அளவுக்கு முளைத்தது என்றும் சிறிதாக தானே இப்போது முளைத்திருக்கிறது எனவும் அமைச்சர் ஒருவர் பேசி இருந்தார். அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்கிறார்.

ஆனால் அமைச்சர் பதினாறாயிரம் ஹெக்டர் நெல் பயிர் பாதிப்பு என கூறுகிறார் என்றும் பாதிப்புகளை உரிய முறையில் கணக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முதலமைச்சரும் அமைச்சர்களும் பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர் என விமர்சித்தார். விவசாயிகள் படும் சிரமங்களை கண்டுகொள்ளாமல் கோமாளித்தனமாக திமுக அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். நெல் சிறிதாக முளைத்தால் என்ன., நாற்று நடும் அளவுக்கு முளைத்தால் என்ன., அது வீண் தானே என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு அருகதை இல்ல! அவர் ஆட்சியில கால் கூட தரையில படல... பந்தாடிய அமைச்சர் சேகர்பாபு...!
திமுக ஆட்சியில் தான் நெல் கொள்முதல் அளவு குறைக்கப்பட்டது என்றும் தூங்குபவர்களை எழுப்பலாம்., ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஆயிரம் மூட்டைகளாக இருந்த கொள்முதல் திமுக ஆட்சியில் 800 மூட்டைகளாக குறைக்கப்பட்டது என்றும் ஃபெயிலியர் மாடல் திமுக அரசு எனவும் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ், எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...!