தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாநகரத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத இடமே இல்லை என்றும் அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் மூன்று மாதத்தில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார். குற்றவாளிகளை காப்பாற்றும் பணிகள் திமுக ஈடுபட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: சிக்கியது ரூ.2.44 கோடி!!! திமுக நிர்வாகி காரில் கட்டுக் கட்டாய் பணம்!! அட்டை பெட்டியில் பதுக்கல்!!
தற்போது நடைபெற உள்ள தேர்தல் தமிழகத்தை சுரண்டும் ஒரு குடும்பத்திற்கும் தமிழக மக்கள் மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் என்று தெரிவித்தார். ஒரு குடும்பம் பிழைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு கோடி மக்களை வாட்டி வதைப்பதாக குற்றம் சாட்டினார். புதுப்புது வித்தைகளை கண்டுபிடித்து கொள்ளையடிப்பவர் செந்தில் பாலாஜி என்று விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: ஆமா, நான் டேஞ்சர்தான்..! அதிரடியாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!