தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுகவில் உள்ள உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவு எம்எல்ஏக்கள், தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது தமிழக அரசியலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சட்டமன்றத்தில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. யார் கட்சியின் கொறடா என்பது குறித்தும் சட்டமன்ற குழு தலைவர் யார் என்ற பிரச்சனையும் வலுத்து வருகிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க செங்குத்தாக அதிமுக பிளந்திருக்கிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எதிர் அணியினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எஸ்.பி வேலிமணி தரப்பிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக யாருக்கு...? - திடீர் மனமாற்றத்தில் சீனியர் தலைகள்... முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி...!
பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து வேலுமணி தரப்பு கையெழுத்து பெரும் நிலையில் ஆதரவாளர்களுக்கு இந்த அறிவுறுத்தலை கொடுத்துள்ளார். அதிமுக பொது குழுவை கூட்டி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்று வேலுமணி தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது. இந்த நிலையில் எதிரணியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் இபிஎஸ் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தொடர்ந்து ஒதுக்கப்படும் EPS..! நமது அம்மா நாளிதழிலிருந்து எடப்பாடியின் பெயர் நீக்கம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!!