பயங்கரவாதத்தை அழிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்திய அரசுக்கும் ராணுவப் படைகளுக்கும் ஆதரவாக இருப்போம் என்றும் உறுதியோடு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆப்ரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல்! பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய ஆலோசனை!

அதில், பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது என்று கூறியுள்ளார். மேலும், பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இறங்கி அடிக்கும் இந்திய ராணுவம் "ஆப்ரேஷன் சிந்தூர்"! அதிகாலையே அதிரடி பாய்ச்சல்..!