2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுவரை இரண்டு கட்ட பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகளை எடுத்துரைக்கும் திமுக ஆட்சியில் நடக்கும் பிரச்சினைகளை கூறியும் மக்களிடம் பேசி வருகிறார். அது மட்டுமல்லாமல் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
பசுமை வீடு, தாலிக்கு தங்கத்துடன் பட்டுச்சேலை, மும்முனை மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இந்த நிலையில் நாளை முதல் எடப்பாடி பழனிச்சாமி தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதையும் படிங்க: அடிதூள்...!! மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு; விவசாய கடன்கள் ரத்து - அதிரடி திட்டங்களை அறிவித்த இபிஎஸ்...!

கிருஷ்ணகிரியில் இருந்து தனது மூன்றாம் பட்ட பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி அந்த மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தளி, வேப்பனப்பள்ளி, ஓசூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தனது பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த காடு செட்டி பள்ளிக்கு எடப்பாடி பழனிச்சாமி 3.40 மணியளவில் வருகை தர உள்ளார். அதனைத் தொடர்ந்து 4.10 மணிக்கு அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
பின்னர் 12-ந்தேதி காலை 8 மணிக்கு ஓசூரில் புதிய மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். பிறகு ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
சிறுகுறு தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகள், பில்டர் ஒனர்ஸ் அசோசியசன் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடும் எடப்பாடி பழனிச்சாமி, அன்றைய தினம் மாலை 5:30 மணி அளவில் ரோடு ஷோ மேற்கொண்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார்.
இதையும் படிங்க: மது போதையில் எடப்பாடி பழனிசாமி கண்முன்பே இளைஞர்கள் செய்த காரியம்... தட்டித்தூக்கிய போலீஸ்!