கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் இரண்டாம் நாளில் வடவெள்ளி பகுதியில் பேசினார். திறந்த வேனில் நின்றபடி உரையாற்றிய அவர், தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் கட்டுவதாகக் குற்றம்சாட்டினார். கோவில் கட்டுவதற்காக, தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள்.
அந்தப் பணம் கோவிலை அபிவிருத்தி செய்யவும், விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், திமுக அரசு இந்தப் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுகிறது. அரசாங்க நிதியில் இருந்து கல்லூரிகள் கட்ட முடியாதா? கல்வி முக்கியம் தான், ஆனால் அதற்கு அரசு நிதியைப் பயன்படுத்த வேண்டும். கோவில் பணத்தை இதற்கு உபயோகிப்பது சதிச் செயலாகவே மக்கள் பார்க்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அறநிலையத்துறை கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்றே தான் கூறியதாகவும் தனது பேச்சு மடைமாற்றப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தனது பேச்சுக்கு கண்காது மூக்கு வைத்து விவாதம் நடைபெற்ற வருவதாகவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்லூரிகளை பட்டியலிட்டும் பேசினார். ஒரே ஆண்டில் பதினோரு மருத்துவக் கல்லூரிகளை அதிமுக கொண்டு வந்தது என்றும் கல்வியில் அதிமுகவின் வரலாறு தெரியாமல் முதலமைச்சர் பேசுவதாகவும் கூறினார்.
திமுக ஆட்சியின் உயர்கல்வி என்ன வளர்ச்சி அடைந்தது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுக ஆட்சியில் ஏழு சட்டக் கல்லூரி கொடுத்து உள்ளோம் என தெரிவித்தார். அறநிலையத்துறை பணத்தில் கல்லூரி நடத்துவதால் மாணவர்களுக்கு அனைத்தும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசு கல்லூரியாக இருந்தால் மாணவர்களுக்கான தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சியில் நல்லாட்சியா? கோர அரசின் குடும்ப ஆட்சி... விளாசிய இபிஎஸ்..!
இதையும் படிங்க: எடப்பாடிக்கு சாதகமான சுற்றுப்பயணம்.. உற்றுப்பார்த்த டெல்லி.. அமித்ஷாவே வராராமே?