2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் கூட்டணி உறுதியான பிறகு முதல் முறையாக அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சீட்டுக்காக பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூரில் மூன்று கோடி ரூபாய் கட்டி சீட்டுக்காக ஒருவர் ஏமாந்ததாக சுட்டிக்காட்டி பேசியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ்- ஐ கண்டதும் வணக்கம் வைத்த செங்கோட்டையன்! பரபர சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியது!

முன்னாள் அமைச்சர் ஒருவர் சட்டமன்ற தேர்தல் சீட்டிற்காக பணம் கட்டி ஏமாந்ததாகவும், சரவணன் என்ற நபர் ஒருவர் இபிஎஸ்க்கு தான் நெருக்கமானவர் எனக் கூறி பணம் பெற்றதாகவும் எச்சரித்துள்ளார். எனவே கட்சியில் உழைத்தவர்களுக்கு தான் சீட் என்றும் பணத்துக்காக சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வரும் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!