கல்வி உரிமைத் திட்டத்திற்கு திமுக அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன் என்றும் திமுக அரசுக்கு தனது கண்டனத்தையும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கல்வி உரிமை திட்ட நிதி ஒதுக்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை திமுக அரசு முடக்கியுள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுயபுராணங்களை பாடுவதில் தான் தீவிரமாக உள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!

எனவே, உடனடியாக கட்டாய கல்வி உரிமை திட்டத்தை முழுமையாக, முறையாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!