பொங்கல் திருநாளுக்கு முதல் நாளாக, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழியை முழுமையாக உணர்த்தும் ஒரு திருவிழாவாக விளங்குகிறது. இந்தத் தீயானது வெறும் பொருட்களை எரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. நமது மனதில் படிந்திருக்கும் பழைய கோபங்கள், பொறாமை, வன்மம், துயரங்கள் எல்லாவற்றையும் சுட்டெரித்து சாம்பலாக்க வேண்டும் என்ற ஆழமான தத்துவத்தை உள்ளடக்கியது.
வாழ்க்கையைப் புதுப்பிக்கும், மனதைத் தெளிவுபடுத்தும், இயற்கையோடு இணைக்கும் ஒரு அழகிய திருநாள். அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இந்தப் போகியைக் கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கலை வரவேற்கும் விதமாக, இன்று போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போகி பண்டிகை மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தீய சக்தி அகன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் கூறி போகிப் பண்டிகை வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: EPS உண்மை பேசின நாளே இல்ல... பூங்கா பெயர் மாற்றம் குறித்த எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போகி பண்டிகை மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தார். நான்கரை ஆண்டுகள் மக்களை வாட்டி வதைத்த தீமைகள் யாவும் அகன்றிட மக்கள் ஏற்றும் போகியின் நெருப்பு அழித்தொழிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். நாளை வரும் தை, தமிழகத்தின் மீட்சிக்கு அடித்தளமிடட்டும் என்றும் அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இன்றும் நேர்காணலை தொடரும் இபிஎஸ்... சென்னைக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம்...!