ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில், 46 வயது பெண்ணை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்காபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்ணின் மகள் வழி பேரன் 12 வயதுடையவர். எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனை, பெற்றோர் வெளியூருக்கு செல்லும் நேரங்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் பாட்டியின் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் பாட்டி வீட்டுக்கு செல்லுமாறு பெற்றோர் சிறுவனிடம் கூறியுள்ளனர். ஆனால் சிறுவன் பாட்டி வீட்டுக்கு செல்ல மறுத்து அழுததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனிடம் காரணம் குறித்து விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!
அப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாட்டி தன்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறுவன் தெரிவித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுவன் அளித்த தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிறுவனுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் உடனடியாக காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், குழந்தைகள் தங்களிடம் தெரிவிக்கும் அசாதாரண மாற்றங்களை பெற்றோர் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையின் முடிவில் மேலும் விவரங்கள் தெரியவரும்.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!