தமிழ்நாடு ›

தொழிற்சாலையில் பற்றிய தீ.. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

விராலிமலை அருகே தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர் எஸ் ஆர் என்ற பெயரில் தேங்காய் நார் உரித்து கயிறு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை ஆனது வெளிச்சந்தையில் இருந்து தேங்காய் மட்டைகள் வாங்கி அதனை இயந்திரம் மூலம் நாராக்கி, அதன் மூலம் கயிறுகளை தயாரித்து வெளி மாநிலங்களுக்கு இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த தேங்காய் மட்டைகளில் திடீரென தீ பற்றியுள்ளது. தொடர்ந்து தீ மள மளவென்று எரிந்ததில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளது. இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கை வைத்த ED.! பகீர் கிளப்பும் தில்லாலங்கடி: கூண்டோடு சிக்கும் திமுக புள்ளிகள்..!

முன்னதாக தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, இரண்டு தீயணைப்பு வண்டிகளில் இருந்து தண்ணீர் பீச்சி அடைக்கப்பட்டது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் தொழிற்சாலை முற்றிலும் இருந்த ஏராளமான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகின. மூலப் பொருட்கள், தேங்காய் மட்டைகள், மின் மோட்டார், கன்வேயர் பெல்ட் என 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

இதையும் படிங்க: கார்டு மேல இருக்குற நம்பர் போலோ.. அமெரிக்க வாழ் இந்தியர்களையும் விட்டு வைக்கல.. சைபர் கிரைமில் ஈடுபட்ட 62 பேர் கைது..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी