இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக கூட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 9 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கோடியக்கரையில் இருந்து சென்று மீன்பிடித்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அவங்க என் குடும்பம்... இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் - அன்பில் மகேஷ் உறுதி...!