நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வபோது வனவிலங்குகளில் நடமாட்டம் நாளைக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏழு வருடமாக ராதாகிருஷ்ணன் என்கிற ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது இந்த காட்டு யானை ஆனது இதுவரை அந்தப் பகுதியில் 12 பேரை கொண்டுள்ளது .
குறிப்பாக மூலக்காடு, ஆரோட்டுபறை, பார்வுட் போன்ற பகுதிகளில் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானையை பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டம் நடத்தியதின் பெயரில் கடந்த வாரம் 15 ஆம் தேதி இந்த காட்டு பிடிப்பதற்கு சில நிபந்தனைகளோடு வனத்துறை உயர் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஏழு நாட்களாக இந்த காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் நூறுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர் .
முதுமலையிலிருந்து கும்கி யானைகளான வசீம் ,விஜய், பொம்மன், சீனிவாசன் என நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையை கண்காணிப்பு பணியில் நடைபெற்றன. அதுமட்டுமின்றி இரண்டு தெர்மல் ட்ரான் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணியானது நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: அனைத்து அரசு சேவையும் ஒரே இடத்தில்..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!!
ஏழு நாட்களாக இந்த ராதாகிருஷ்ணன் காட்டு யானை புதர்கள் நிறைந்த பகுதிக்குள் சென்று மறைந்திருந்த சூழ்நிலையில் இன்று வனத்துறையினர் அந்த காட்டு யானை சமவெளி பகுதிக்கு விரட்டி கொண்டு வந்தனர் .அப்பொழுது மரத்தின் மீது பரன்கள் கட்டப்பட்டு இரண்டு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி நிரப்பிய துப்பாக்கிகளுடன் அமர்ந்து இந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 11 மணி அளவில் ராதாகிருஷ்ணன் என்கிற காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் முதல் மயக்க ஊசியானது செலுத்தப்பட்டது. அதன் பின்பு இந்த காட்டு யானை ஆனது அங்கிருந்து புதர்கள் நிறைந்த பகுதியை நோக்கி ஓடியதால் வனத்துறையினர் சிரமம் அடைந்தனர்.
மேலும் மூன்று மணி நேரத்திற்கு பிறகு இந்த காட்டு யானையை மீண்டும் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சுற்றி வளைத்து கும்கி யானையின் மீது அமர்ந்து இரண்டாவது மயக்க ஊசி செலுத்தப்பட்டது .
அதன்பின்பு கும்கி யானைகள் துணையுடன் காட்டு யானையான ராதாகிருஷ்ணனை வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சென்று தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்பு கும்கி யானைகள் துணையுடன் ராதாகிருஷ்ணன் யானையை கயிற்றில் கட்டி லாரியில் ஏற்றுவதற்காக அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து அந்த காட்டு யானையை எல்லமலை பகுதியில் இருந்து லாரி மூலம் முதுமலை வனப்பகுதியில் அதற்கான தயாரிக்கப்பட்ட மரத்திலான கிரால் கூண்டுகள் இரண்டு வாரங்களுக்கு அடைக்கப்படும் எனவும், அதனுடைய தன்மையை மாற்றி மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு விடப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் இந்த காட்டு யானையால் நாங்கள் பெரிதும் அவதி உற்று வந்த நிலையில் வனத்துறையினர் இந்த காட்டு யானையை பிடிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதனால் காலை பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் தேயிலை தோட்ட வேலைக்கு செல்லக்கூடிய பணியாளர்கள் எவ்வித பயமும் இன்றி செல்வார்கள் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: H1B விசா கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கா..?? பரிசீலிக்கும் அமெரிக்கா..!!