தங்கத்தின் விலை உயர்வுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்க வைத்துள்ளன.
இந்தியாவில் தங்கத்தின் கலாச்சார முக்கியத்துவம் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக தங்கம் வாங்குவது இந்தியாவில் பரவலாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தங்க நகைகள் மீதான மோகம் மிக அதிகம். இதனால், உள்நாட்டு தேவை தொடர்ந்து உயர்ந்து, விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது.

தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்களையும், நகைப் பிரியர்களையும் பெரிதும் பாதித்துள்ளது. சென்னையில் 2025 ஆகஸ்ட் 28 அன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 9,405 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 75,240 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்தது. இந்த நிலையில் மேலும், 520 ரூபாய் உயர்ந்து உள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சபரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.
இதையும் படிங்க: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கலாமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
சமீப நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒரு சவரன் 76, 280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்த நிலையில் 9,535 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: புடின் ஒரு அரக்கன் ; மேக்ரான் விமர்சனம்! படையெடுப்போம் ஜாக்கிரதை! ரஷ்யா மிரட்டல்!!