வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

#BREAKING: ஆளுநர்கள் மசோதாக்களை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வாசித்தது. அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்குள்ள அதிகாரங்கள் மசோதா மீது முடிவெடுக்கும் உச்சவரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மசோதாவுக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநருக்கு அரசியல் சாசனம் 200, 201 இல் இருக்கும் அதிகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற கருத்தை கேட்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைச்சரவை தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மசோதா மீது காரணமே இன்றி முடிவெடுக்காவிடில் நீதிமன்றமே முடிவு எடுக்க முடியும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம் என்றும் ஆனால் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கின்றன என்றும் மத்திய அரசு கூறுவது போல் மசோதா தொடர்பாக ஆளுநருக்கு நான்காவது வாய்ப்பு இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது வழக்கின் முந்தைய தீர்ப்புக்குள் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாடே எதிர்பார்ப்பு… குடியரசுத் தலைவர் கேட்ட 14 கேள்விகள்… இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்…!

ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் மசோதா மீது காரணமே இன்றி முடிவெடுக்காவிடில் நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்றும் நீதிமன்றங்கள் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால வரம்பை நிர்ணயிப்பது சட்டம் வழங்கியுள்ள நெளிவு சுழிவுக்கு முரணாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: SIR பணிகளுக்கு எதிர்ப்பு… உள்ளாட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी