திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா கடந்த 2025 ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், நாகர்கோவிலைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, அவரை மேடையில் புறக்கணித்து நேரடியாக துணைவேந்தர் என். சந்திரசேகரிடம் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்தச் சம்பவம் விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவி ஜீன் ஜோசப் இந்த முடிவுக்கு காரணமாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக செயல்படுவதாகவும், தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் மோதலை பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சில மாதங்களுக்குப் பின், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என்றும், துணைவேந்தரிடம் பெற்ற பட்டம் செல்லாது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேலும், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அவங்க கிள்ளுக்கீரையா?.. இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி... திமுகவை தோலுரித்த EPS...!
இந்த வழக்கு 2025 டிசம்பர் மாதத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மாணவியின் செயல் ஒருபோதும் ஏற்கத்தக்கது அல்ல என்று கண்டனம் தெரிவித்தனர். ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் போறீங்களா..?? இங்கெல்லாம் இன்று NOT ALLOWED..!! நோட் பண்ணிக்கோங்க..!!