• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING இனி சிறையில் இருந்து தப்பினால் துப்பாக்கிச்சூடு... கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு... சிறைத்துறை அதிரடி முடிவு...!

    இனி கைதிகள் சிறையில் இருந்து தப்பினால் துப்பாக்கிச்சூடு நடத்த டிஜிபி ரத்தோர் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 28 Oct 2026 09:32:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gun shoot against escaped prisoners'

    சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவு புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து டிஜிபி ரத்தோர் அதிரடி ஆணை.

    தமிழகத்தில் சென்னை புழல் மத்திய சிறை மற்றும் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறை ஆகியவற்றிலிருந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புழல் சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேர் பிடிபட்டுள்ளனர். எஞ்சிய நான்கு பேரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரு கைதிகள் தப்பிச் சென்றனர். நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகதி, திருட்டு வழக்கில் விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் சிறையின் சுற்றுச்சுவரில் இருந்த கேபிள்களைப் பயன்படுத்தி ஏறித் தப்பியதாகத் தகவல் வெளியானது. மற்றொரு கைதியான சுரேஷ், சிறை வளாகத்திற்கு அருகிலுள்ள சிறை அங்காடியில் பணியாற்றியபோது அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    இருவரையும் தேடும் பணியில் தனிப்படைக் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில், சுதீப் போகதி சென்னை அண்ணாநகர் பகுதியிலும், சுரேஷ் குன்றத்தூர் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி ஏழு சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தமிழகச் சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி காவலரை அறைக்குள் வரவழைத்த கைதிகள், அவரைத் தாக்கிவிட்டு சாவியைப் பறித்து, சிறையின் பிரதான நுழைவாயில் வழியாகத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறைக் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, தேனி மற்றும் அண்டை மாவட்டங்களில் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சிலர் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்தது ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 13 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

    எஞ்சியுள்ள மீனாட்சிசுந்தரம், திருப்பதி, நிஷாத் மற்றும் ரெஜின் ஆகிய நான்கு கைதிகளைப் பிடிப்பதற்காக, சிறைச்சாலையின் பின்புறம் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி ஒன்பது சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஒரு வாரத்திற்குள் புழல் மற்றும் தேனி சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளதால், சிறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளன.

    இதனிடையே, சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகலை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் உயர் கோபுர கண்கானிப்பில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்க வேண்டும் என்றும், சிறையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் போலீசாருக்கு சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share