ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- ராஜீவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பார்க் சந்திப்பு வரையிலான மேம்பால கட்டுமானப் பணிகள் காரணமாக சாலை அகலம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, காலை நேரங்களில் (காலை 08:30 மணி முதல் 11:00 மணி வரை) இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலைக் குறைக்கும் விதமாக, சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1 முதல் UPI - யில் வருகிறது அதிரடி மாற்றங்கள் - பேலன்ஸ் செக் டு டிரான்சாக்ஷன் வரை முழு விவரம் இதோ...!
தற்போதுள்ள போக்குவரத்துப் பாதைக்கு கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பூங்கா நோக்கிச் செல்லும் வாகனங்கள், இனி எதிர் பாதையின் ஒரு பகுதியை (டைடல் பூங்காவிலிருந்து மத்திய கைலாஷ் நோக்கிச் செல்லும் பாதை) பயன்படுத்த அனுமதிக்கப்படும். இந்த ஏற்பாடு, வாகனங்கள் வி.ஹெச்.எஸ். (V.H.S) மருத்துவமனைக்கு அருகிலுள்ள யு-டர்ன் வரை சுமார் 300 மீட்டர் தூரம் செல்ல வழிவகுக்கும்.
இந்த புதிய போக்குவரத்து ஏற்பாடு ஆகஸ்ட் 01, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. இது காலை 08:30 மணி முதல் காலை 11:00 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. “என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலனை நம்பிச் சென்ற காதலி... நண்பர்களுக்கு விருந்தாக்கி சீரழித்த கொடூரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!