முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13 ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

எனவே, நாளை முதல் மே.12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.13ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே. 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இதையும் படிங்க: அக்னி நட்சத்திரம் ஆஃப்.. இடி, மழையுடன் கொட்ட காத்திருக்கும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்..!

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரை இன்று தொடங்கி மே.11ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. மே. 12 மற்றும் 13ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி மே.13 வரை எச்சரிக்கை ஏதுமில்லை எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டென மாறிய வானிலை! வெளுத்து வாங்குது மழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!