அமெரிக்கா ஈரான் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வாரம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவலானது வெளியாக இருக்கிறது. போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹோர்முஸ் நீரணையை திறக்க வேண்டும என ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் காலக்கெடு இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் இடையேயான போரானது நடைபெற்று வரக்கூடிய வேளையில் உலகளவில் பல்வேறு பாதிப்புகளை அது ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கேடு விதித்திருந்த நிலையில் அந்த காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தும் பட்சத்தில் போர் நிறுத்தத்திற்கு தயார் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியின் நேரடி வேண்டுகோளை ஏற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரத்திற்கும் முன்பு ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்து தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார்.
செவ்வாய்க்கிழமை இரவு திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களைத் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
ஏற்கனவே ட்ரம்ப் தரப்பிலிருந்து ஒரு 15 அம்சங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இதையெல்லாம் செய்தால் போரை நிறுத்துவதாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலுக்கு ஈரானும் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. தற்போது ஈரான் தரப்பில் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பும் காலக்கெடுவை நீட்டித்திருக்கிறார். ஈரான் அதேபோல் அமெரிக்கா போர் என்பது தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு ஒரு மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய ஒரு போர், உலக அளவில் ஒரு மூன்றாவது உலக போராக மாறிவிடுமோ என்று அச்சப்படக்கூடிய அளவிற்கு பதற்றத்தை உருவாக்கியது
இதையும் படிங்க: அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!