காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.
ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. ஆனாலும், இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். எனவே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள ரிசாட்-1பி ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வரும் 18 ஆம் தேதி காலை 5.59 மணியவில் பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக பூமி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இஸ்ரோ தலைவர் வி நாராயணன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறியதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது,இதையடுத்து வரும் 18ஆம் தேதி 101 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம்.

1979 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினோம் அது, அது 98 சதவீதம் வெற்றி அடைந்தது,அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு அனுப்பிய எஸ் எல் வி ராக்கெட் 100 சதவீதம் வெற்றி பெற்றது. தற்போது 18ஆம் தேதி அனுப்பப்பட உள்ள 101 வது ராக்கெட் ஏவுதளம் மிக முக்கியமானது,பிஎஸ்எல்வி சி61 இந்த ராக்கெட் மூலம் பூமியில் உள்ள பெரும்பாலனாவைகளை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலின் போது நமது அனைத்து சேட்டிலைட்களும் நன்றாக வேலை செய்தது,இந்தியா தற்போது பயங்கர வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த கேமராவில் ஒன்று நமக்கு நிலவில் உள்ளது,

நாம் எந்த நாடு உடனும் போட்டி போடவில்லை நம் நாட்டுக்கு என்ன தேவையோ அதை செய்து கொண்டிருக்கிறோம்,நம் நாடு அனுப்பக்கூடிய சேட்டிலைட் அனைத்தும் நம் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கும், நம் நாட்டு மக்களுக்கு தேவைப்படுகின்ற பாதுகாப்புக்காக தான் நாம் அனுப்புகின்றோம். அனைத்து சேட்டிலைட்களும் நன்றாக வேலை செய்கிறது.

நாம் அனுப்பப்படும் சாட்டிலைட் தொலைக்காட்ச, தொலைபேசி, மக்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் எனத் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. மங்கள்யான் திட்டத்தில் நாம் அனுப்பியது ஆர்பீட்டர் இயந்திரம் தற்போது மங்கள்யானில் லேண்டிங் இயந்திரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும் இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு..! அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி..!