தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்து பேசி இருந்தார்.
தொடக்கத்தில் திமுகவை மட்டுமே விஜய் விமர்சித்து பேசி வந்த நிலையில், சமீப நாட்களாக அதிமுகவை வம்பெழுத்து வருகிறார். இன்றைய உரையில், மீண்டும் திமுக ஆட்சி என்ற சரித்திரமே இல்லை என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். எதிரிகள் வெளியில் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்ளலாம் என்றும் நமக்குள் டீல் முக்கியம் என்றும் விஜய் பிழைப்பு நடத்த விட மாட்டார் என்று அவர்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

பழிமேல் பழி போட்டு கரூரில் ஆரம்பித்து ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் பிரச்சனை கொடுப்பதாகவும் கூறி இருந்தார். திமுக, அதிமுக கட்சிகள் டீலிங் வைத்திருப்பதாக மறைமுகமாக சாடி இருந்தார் விஜய். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தோல்வி பயம்...! மகளிர் தொகை உயர்வுக்கு இதுதான் காரணம்... ஜெயக்குமார் விளாசல்..!
அதிமுகவை வம்பிழுத்தால் விஜய் வாங்கிக்கட்டிக்கொள்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். விஜய் எப்படி அழைத்தாலும் எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என கூறினார். ஆட்சியில் பங்கு தருகிறேன் என விஜய் அழைத்தும் ஒருவர் கூட செல்லவில்லை என்று விமர்சித்தார். திமுகவின் தோல்வி உறுதியாகி உள்ளது என்றும் அரசு பணத்தை மக்களுக்கு வாரி இறைத்தாலும் திமுகவின் தோல்வி உறுதி என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் என்ன தப்பு செஞ்சேன்... ஏன் கைவிட்டீங்க..! ஜெயக்குமார் ஆதங்கம்..!