திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஏப்ரல் 4 அன்று தீவிரமான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சமதுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.
இந்தப் பிரச்சாரம் காலை நேரத்தில் தொடங்கியது மற்றும் பெரியார் சிலை அருகிலிருந்து வாகனப் பேரணி வடிவில் நடைபெற்றது. கனிமொழி தனது பிரச்சாரத்தின் போது, திமுகவின் அரசு செயல்படுத்தியுள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக, முதியோர் உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சாத்தியமான, நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இடம் பெறச் செய்துள்ளதாகவும், அவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். மேலும், பாஜகவின் வெறுப்பு அரசியலைச் சாடிய அவர், அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து, திமுக கூட்டணி தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ரூ.5,400 கோடியில் அசத்தல் திட்டம்... திண்டுக்கல் மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கனிமொழி...!
அப்போது, எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்தார். பிரிட்ஜ் தருவதற்கு பதிலாக வாஷிங் மெஷின் பெறுவதாக கூறியிருக்கலாம் என்று தெரிவித்தார். ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி வாஷிங் மெஷினுக்குள் போய்விட்டார் எனவும் விமர்சனம் செய்தார். தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக எனும் பெரிய வாஷிங் மெஷினிற்குள் சென்று விட்டதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!