மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி, கட்சிகளுக்கிடையேயான உறவு, அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் பேசிய விதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது.
காங்கிரஸுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கார்த்திக் சிதம்பரம் சிரித்துக்கொண்டே, “ஐந்து கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று பதிலளித்தார். திமுகவைப் பொறுத்தவரை, “ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும்” என்று கூறிய கார்த்திக் சிதம்பரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது இன்னும் மரியாதை இருப்பதாகவும் வெளிப்படுத்தினார்.

தேர்தலுக்கு முன்பு இருந்த கூட்டணியை நினைவுகூர்ந்த அவர், “முதுகில் குத்தியது காங்கிரஸ்” என்று சிலர் கூறுவது பொருத்தமற்றது என்று தெளிவாக மறுத்தார்.“ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருந்த திமுகவை காங்கிரஸ் முதுகில் குத்தியது என்று சொல்ல முடியாது. நிலையான ஆட்சியும் மதசார்பற்ற ஆட்சியும் அமைய வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்தது” என்று விளக்கினார்.
இதையும் படிங்க: "அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்!
இந்த முடிவு காங்கிரசின் சரியான நடவடிக்கை என்றும், மக்கள் அதையே விரும்புகிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். கூட்டணி முறிவு குறித்து பேசியபோது, “பரஸ்பரமாக பிரிந்திருக்கலாம் என்பது என் கருத்து” என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குறைகூறாமல், தங்கள் வழியில் செல்லலாம் என்பதே அவரது நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சஸ்பென்ஸ் ஓவர்..! கேரளாவில் புதிய முதல்வராகிறார் சதீசன்..! காங்கிரஸ் கட்சி முடிவு..!