சமுதாயத்தில் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. சமுதாயத்தில் பிறப்பால் மக்களை பிரித்துப் பார்க்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை கும்பாபிஷேக விழாவில் செல்வப் பெருந்தகைக்கு நடந்தவற்றிற்கு அறநிலையத்துறை விசாரணை நடத்தி ஏன் இப்படி நடந்தது என்று அறிக்கை வெளியிட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போதுள்ள ஆட்சி காலம் இருண்ட காலம் என்பது சொல்வது சரியல்ல. அவர் மூன்று தேர்தலில் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளார். அவர் நான்காவது தேர்தலிலும் தோல்வியை தழுவ உள்ளார். எதையாவது ஒன்றை உருட்டி புரட்டி பார்க்கலாம் என்று செயல்படுகிறார். பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி செய்து தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினால்தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள். அதனால் மீண்டும் மக்கள் அதிமுகவை நோக்கி செல்வார்கள் என்று நான் நம்பவில்லை. மேலும் அதிமுக பாஜகவோடு பயணம் செய்வதால் நிச்சயமாக தமிழ்நாடு மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.
அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்டபயன்படுத்துகிறார்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் தவறு, நான் பழனி கோயிலில் அறங்காவலராக இருந்துள்ளேன். பழனி கோயில் பெயரிலேயே கல்லூரி உள்ளது பழனி கோயில் அறக்கட்டளையே கல்லூரியை நடத்தியுள்ளது. அப்போது கோயிலில் வர நிதியை வைத்து தான் கல்லூரிக்கு பணத்தை கொடுத்தோம். கல்விக்காக கோயில் நிதியை செலவு செய்வது தவறு என்று சொல்வதை ஏற்க முடியாது. கோயிலை விட கல்விக்கு தான் அதிக செலவை செய்ய வேண்டும்.... புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி
இதையும் படிங்க: 3 வாரம் தான் இந்தியாவில்.. மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம்.. பிரதமர் மோடியை கிண்டலடித்த ஜெய்ராம் ரமேஷ்..!
இதையும் படிங்க: #ATS: ரொம்ப பெருமையா இருக்கு.. உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறை முன்னணி.. முதல்வர் பெருமிதம்..!